இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நேற்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆர்பிஐ சார்பில் அவருக்கு அசிடிட்டி பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தது.
இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை சார்பில் ஆர்பிஐ கவர்னர் உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அதில் ’ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அமிலத்தன்மை காரணமாக நேற்று இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் உடல்நிலை சீராகி நலமுடன் இருக்கிறார்’ என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளிடப்பட்டுள்ளது.
மேலும் விரைவில் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)