• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகள் பெரிதும் வரவேற்கத்தக்கவை: பிரதமர் மோடிக்கு ‘சைமா’ தொழில் அமைப்பு நன்றி | SAIMA industry thanks Pm Modi for concessions announced by Reserve Bank are highly welcome

GenevaTimes by GenevaTimes
November 17, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகள் பெரிதும் வரவேற்கத்தக்கவை: பிரதமர் மோடிக்கு ‘சைமா’ தொழில் அமைப்பு நன்றி | SAIMA industry thanks Pm Modi for concessions announced by Reserve Bank are highly welcome
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோவை: அமெரிக்க வரி விதிப்பு நெருக்​கடியை எதிர்​கொள்ள ரிசர்வ் வங்கி அறி​வித்​துள்ள சலுகைகளுக்​காக, பிரதமர் நரேந்​திர மோடிக்கு தென்​னிந்​திய மில்​கள் சங்​கம் (சை​மா) நன்றி தெரி​வித்​துள்​ளது. மேலும், நூற்​பாலைகள், விசைத்​தறி, சாய ஆலைகளுக்​கும் வரிச் சலுகையை பரிந்​துரைக்​கு​மாறு கோரிக்கை விடுத்​துள்​ளது.

இந்​தி​யப் பொருட்​கள் இறக்​கும​திக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்​தர​விட்​டார். இந்த நடவடிக்​கை​யால் இந்​தி​யா​வில் ஜவுளித் தொழில் ஏற்​றும​தி​யாளர்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

வரி விதிப்பு உத்​தரவு 3 மாதங்​கள் கடந்த நிலை​யில், இதனால் ஏற்​பட்​டுள்ள நெருக்​கடியை எதிர்​கொள்ள சலுகைகள் அறிவிக்​கு​மாறு மத்​திய அரசுக்கு பல்​வேறு தொழில் அமைப்​பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்​தனர். இந்​நிலை​யில், ரிசர்வ் வங்கி சலுகைகள் அறி​விப்பு வெளி​யிட்​டுள்​ளதற்கு தொழில் துறை​யினர் வரவேற்​புத் தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து தென்​னிந்​திய மில்​கள் சங்​கத் (சை​மா) தலை​வர் துரை.பழனிச்​சாமி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்கா​வுக்கு சுமார் ரூ.1 லட்​சம் கோடி வரை ஏற்​றுமதி செய்​து​வந்த இந்​திய ஜவுளி உற்​பத்​தி​யாளர்​கள், இந்​திய ஏற்​றும​திப் பொருட்​கள் மீது திடீரென அமெரிக்கா அறி​வித்த 50 சதவீத வரி விதிப்பு காரண​மாக பெரிதும் பாதிக்​கப்​பட்டு வந்​தனர்.

வரலாற்​றிலேயே முதல்​முறை​யாக உற்​பத்தி நிறுத்​தப்​பட்​டு, பல லட்​சம் தொழிலா​ளர்​கள் தற்​காலிக​மாக வேலை இழக்​கும் நிலை ஏற்​பட்​டது. மேலும், கடன் மற்​றும் வட்​டியை​யும் செலுத்த முடி​யாமல் தொழில்​துறை​யினர் கடும் நிதி நெருக்​கடியை எதிர்​கொண்டனர். இந்​தப் பிரச்​சினையை சமாளிக்க, ஓராண்​டுக்கு கடனை திரும்​பச் செலுத்த காலஅவ​காச​மும், 30 சதவீத கூடு​தல் கடனை​யும் வழங்​கு​வதுடன், ஏற்​றுமதி சலுகை​யை​யும் வழங்க ஜவுளித் துறை​யினர் வேண்​டு​கோள் விடுத்து வந்​தனர்.

இந்​நிலை​யில், இந்​திய ரிசர்வ் வங்கி வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், செப்​டம்​பர் 1 முதல் டிசம்​பர் 31-ம் தேதி வரை செலுத்த வேண்​டிய கடன் மற்​றும் வட்​டியைசெலுத்த, ஆயத்த ஆடை மற்​றும் வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்​கள் ஏற்​றும​தி​யாளர்​களுக்கு காலஅவ​காசம் வழங்​கப்​படும் என்று தெரி​வித்​துள்​ளது.

இது ஆயத்த ஆடை மற்​றும் வீட்டு உபயோக ஜவுளி ஏற்​றும​தி​யாளர்​கள் நிதி நெருக்​கடியை எதிர்​கொள்ள பெரிதும் உதவும். இதற்​காக பிரதமர் மோடி, மத்​திய அமைச்​சர்​கள் பியூஷ் கோயல், நிர்​மலா சீதா​ராமன், கிரி​ராஜ் சிங் ஆகியோ​ருக்கு நன்றி தெரி​வித்​துக் கொள்​கிறோம். ரிசர்வ் வங்கி அறி​வித்​துள்ள சலுகைகளை நூற்​பாலைகள், விசைத்​தறிகள் மற்​றும் சாய ஆலைகளுக்​கும் பரிந்​துரைக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



Read More

Previous Post

200 இடங்களுக்கு மேல் என்.டி.ஏ. முன்னிலை.. சொந்த தொகுதியிலேயே தேஜஸ்வி பின்னடைவு! | இந்தியா

Next Post

கடலில் கவிழ்ந்த சிறிய படகு: சட்டவிரோத நுழைவு முயற்சியின் போது 4 பேர் பலி

Next Post
கடலில் கவிழ்ந்த சிறிய படகு: சட்டவிரோத நுழைவு முயற்சியின் போது 4 பேர் பலி

கடலில் கவிழ்ந்த சிறிய படகு: சட்டவிரோத நுழைவு முயற்சியின் போது 4 பேர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin