Last Updated:
பூனம் குப்தா இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) துணை ஆளுநராக பூனம் குப்தாவை நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) துணை ஆளுநராக பூனம் குப்தாவை நியமித்து கடந்த புதன்கிழமை அறிவிப்பு வெளியானது. ஏப்ரல் 7-9, 2025 அன்று திட்டமிடப்பட்ட இருமாத நாணயக் கொள்கைக் குழு (MPC) கூட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாக அவர் பதவியேற்பார் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பதவியில் மூன்றாண்டுகள் பணியாற்றுவார் எனறும் கூறப்பட்டுள்ளது.
பூனம் குப்தா தற்போது இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரக் கொள்கை சிந்தனைக் குழுவான தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் (NCAER) இயக்குநராக உள்ளார். அவர் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும், 16வது நிதி ஆணையத்திற்கான ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
2021 இல் NCAER இல் சேருவதற்கு முன்பு, அவர் வாஷிங்டன்னில் உள்ள சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியில் மூத்த பதவிகளில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக பணியாற்றினார். அவர் மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் (அமெரிக்கா) டெல்லி பொருளாதாரப் கல்லூரியிலும் கற்பித்துள்ளார். மேலும் டெல்லியில் உள்ள இந்திய புள்ளிவிவர நிறுவனத்தில் (ISI) வருகை பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும் பூனம் குப்தா தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தில் (NIPFP) RBI தலைவர் பேராசிரியராகவும், சர்வதேச பொருளாதார உறவுகள் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலில் (ICRIER) பேராசிரியராகவும் பதவிகளை வகித்துள்ளார்.
இதையும் படிக்க: ஹயாவோ மியாசாகியின் Ghibli படங்கள்.. சட்டத்தை மீறுகிறதா Chat GPT..? Open AI சொல்வது என்ன..?
அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டமும், டெல்லி பல்கலைக்கழகத்தின் டெல்லி பொருளாதாரப் பள்ளியிலிருந்து பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். 1998 ஆம் ஆண்டில், சர்வதேச பொருளாதாரத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக பூனம் குப்தா EXIM வங்கி பரிசைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
April 03, 2025 10:45 AM IST


