ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் மறைவிற்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 95.
மேற்கு வங்க மாநிலம் பேளூரை தலைமையிடமாகக் கொண்டு ராமகிருஷ்ண மடம் இயங்கி வருகிறது. இந்த மடத்தின் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி அவர் சிறுநீரகத் தொற்று காரணமாக ராமகிருஷ்ணா மடத்திற்கு சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் சுவாச கோளாறு காரணமாக கடந்த மூன்றாம் தேதி முதல் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு 8.14 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் மறைவிற்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…