Last Updated:
ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரயிலின் தரம் மிகவும் மோசமாக இருந்தது தொடர்பான வைரலான வீடியோ.
காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையின் போது பயணிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் இருந்து எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர்கள் ரயில் மூலம் ஜம்மு & காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சென்ற ரயில் மிகவும் அசுத்தமாகவும், கழிவறைகளின் கதவுகள் உடைந்தும் மோசமான நிலையில் இருந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜூன் 6 ஆம் தேதி திரிபுராவின் உதய்பூரிலிருந்து ஜம்மு தாவிக்கு 13 கம்பெனிகளைச் சேர்ந்த சுமார் 1,200 BSF வீரர்கள் சிறப்பு ரயிலில் புறப்பட்டனர். இந்த ரயில் திரிபுரா, அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள நான்கு நிறுத்தங்களில் இருந்து பிஎஸ்எஃப் வீரர்களை ஏற்றிச் சென்றுள்ளது. இந்நிலையில், 9ஆம் தேதி வீரர்கள் ஏறிய ரயில் அசுத்தமாகவும், பயணிக்க முடியாத நிலையில் இருந்ததும் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகிப் பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில், இன்று இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக அவர், “இது குறித்து நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரயிலின் ரேக் மாற்றப்பட்டது. இதற்குக் காரணமான நான்கு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.
#WATCH | Delhi | On 1,200 BSF jawans deployed for Amarnath Yatra refusing to travel in the train provided to them, citing poor condition of the train, Union Railway Minister Ashwini Vaishnaw says, “Action was taken on this yesterday itself. The train’s rake was changed. Four… pic.twitter.com/UURhTZZguP
— ANI (@ANI) June 11, 2025
மேலும், பாதுகாப்புப் படைகளின் கண்ணியம் மிக முக்கியமானது என்றும், அத்தகைய அலட்சியத்தை எந்த மட்டத்திலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார் என்று ரயில்வே அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
June 11, 2025 8:58 PM IST


