புதுதில்லியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் முதன்முறையாக தோல் வங்கி வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ராணுவ மருத்துவ சேவை மையங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதன்முறையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், தீவிர தீக்காயங்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பாதிப்புக்குள்ளானவர்களுக்கு, குறிப்பாக ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மிகுந்த பயனளிக்கும்.
இந்த மையத்தில் தோல் பாதுகாப்பு வசதி, பதப்படுத்துதல் வசதி, உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. நாடு முழுவதுமுள்ள ராணுவ மருத்துவ மையங்களுக்கு இங்கிருந்து மருத்துவ உதவி கிடைக்கப்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

