இந்திய ராணுவத்தில் நிரப்பப்பட 453 அதிகாரிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் யுபிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்வுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு அறிவிப்பு எண்: 11/2025 -CDS-II
பணி:Indian Military Academy
காலியிடங்கள்: 100
தகுதி: ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Indian Naval Academy
காலியிடங்கள்: 26
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Air Force Academy
காலியிடங்கள்: 32
தகுதி: இயற்பியல், கணிதம் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Officer’s Training Academy – SSC (Men)
காலியிடங்கள்: 276
தகுதி: ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Officer’s Training Academy SSC (Women)
காலியிடங்கள்: 19
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். 2.7.2001-க்கும் 1.7.2007-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: யுபிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வில் ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் மதிப்பெண்கள் குறைக்கப்படும். தேர்விற்கான அட்மிட் கார்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

