Last Updated:
சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் ட்ரேட் மூலம் வாங்க திட்டமிட்டுள்ளது. சிஎஸ்கே நிர்வாகம் சஞ்சுவின் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர்ந்து உறுதிப்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்ரேட் மூலம் வாங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சஞ்சு சாம்சனின் இன்ஸ்டா பக்கத்தை CSK நிர்வாகம் பின் தொடர்ந்தது இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடும் லெவன் சரியாக அமையாததால், அந்த அணி மோசமான தோல்வியை சந்தித்து பட்டியலில் கடைசி இடம் பிடித்தது. இதனால் அணியில் ஸ்டார் பிளேயரை இணைக்க நிர்வாகம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
முன்னதாக, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு சி எஸ் கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் அமெரிக்காவில் சந்தித்துப் பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு தொடரில் அவரை ட்ரேட் மூலம் வரவழைக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முயற்சித்து வருகிறது.
சஞ்சு சாம்சனும் சி எஸ் கே அணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் ராஜஸ்தான் அணி அவரை விடுவிக்க வேண்டும் என்றால் இரண்டு வீரர்களை ட்ரேட் செய்ய சம்மதிக்க வேண்டும் என சிஎஸ்கேவை கேட்டுக்கொண்டுள்ளது.
2013ஆம் ஆண்டில் ராஜஸ்தான் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான சஞ்சு சாம்சன் 2016 மற்றும் 17ஆம் ஆண்டுகளில் டெல்லி அணிக்காக அணி மாறி விளையாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து, 2018-ல் 8 கோடி ரூபாய்க்கு மீண்டும் ஏலம் எடுத்த ராஜஸ்தான் தற்போது 18 கோடி ரூபாய்-க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
August 09, 2025 7:07 AM IST


