• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ராஜஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்

GenevaTimes by GenevaTimes
May 24, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ராஜஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. வழக்கம் போல சன்ரைசர்ஸ் அணியின் ஓப்பனர்கள் அதிரடி காட்ட தொடங்கினர். ஆனால் வெறும் 5 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அபிஷேக் ஷர்மா 12 ரன்கள் எடுத்து ட்ரெண்ட் போல்ட் வேகத்தில் வெளியேறினார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி, 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.

அடுத்து வந்த மார்க்ரம் 1 ரன்னுடனும், ட்ராவிஸ் ஹெட் 34 ரன்களுடனும் வெளியேற, ஹைதராபாத் அணி 99 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. பிறகு நிதீஷ் ரெட்டி, அப்துல் சமத் என ஆவேஷ் கான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுக்க, ஹைதராபாத் அணி 120 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது.

விளம்பரம்

பிறகு ஜோடி சேர்ந்த க்ளாசன் – சபாஷ் அகமது, பந்தை அனைத்து திசைகளிலும் விரட்டினர். அதிரடியாக விளையாடிய க்ளாசன் 33 பந்துகளில் அரைசதமடித்து வெளியேறினார். சபாஷ் அகமது 18 ரன்கள் எடுத்து ஆவேஷ் கான் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளும் சந்தீப் சர்மா 1 விக்கெட்டும் எடுத்தனர். சொந்த மைதானமான சென்னையில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அஷ்வின் சோபிக்கத்தவறினார். சுழற்பந்து வீச்சாளரான சாஹலும் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை.

விளம்பரம்

இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சியாக இருந்தது. இளம் அதிரடி வீரர் அபிஷே் சர்மா 12 ரன்னில் அவுட்டானார். சற்று நேரம் அதிரடியாக ஆடிய திரபாதி 37 ரன்னிலும் டிராவிஸ் ஹெட் 34 ரன்களிலும் அவுட்டாகினர்.

சுழலில் ராஜஸ்தான் அணி சோபிக்க தவறினாலும் சன்ரைசர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மாறிமாறி விக்கெட்டை சாய்த்தனர். சபாஷ் அகமது 3 விக்கெட்களையும் அபிஷேக் சர்மா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

விளம்பரம்

ராஜஸ்தான் அணியில் அதிரடியில் நம்பிக்கையாக இருந்த ஹெட்மெயர், ரோவ்மன் பவல் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர். துருவ் ஜூரலின் அரைசதம் மட்டும் அணிக்கு சற்று ஆறுதலாக இருந்தது. இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்களை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதரபாத் அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. வரும் 26 ஆம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் இறுதி போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதாராபாத் அணிகள் மோத உள்ளன.

விளம்பரம்

.

Read More

Previous Post

Isha Gas Cemetery: ‘ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஈஷா மயானம் எங்களுக்கு வேணும்’ – கலெக்டர் அலுவலகத்தில் கோவை மக்கள்!

Next Post

தங்க நகைகள் வாங்கும் போது உஷார்! அதிக கட்டணம் குறித்த எச்சரிக்கை தேவை… பில் எப்படி கணக்கிடப்படுகிறது?

Next Post
தங்க நகைகள் வாங்கும் போது உஷார்! அதிக கட்டணம் குறித்த எச்சரிக்கை தேவை… பில் எப்படி கணக்கிடப்படுகிறது?

தங்க நகைகள் வாங்கும் போது உஷார்! அதிக கட்டணம் குறித்த எச்சரிக்கை தேவை... பில் எப்படி கணக்கிடப்படுகிறது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin