Last Updated:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ராகுல் டிராவிட் விலகியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ராகுல் டிராவிட் விலகியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் டிராவிட் விலகல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2025 ஐபிஎல் சீசனில் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ராகுல், காலில் காயம் ஏற்பட்ட போதும் வீல் சேரில் வந்து வீரர்களுக்கு பயிற்சியளித்தார்.
ராகுல் டிராவிட்டின் சேவை ஒரு தலைமுறை வீரர்களுக்கு ஊக்கமளித்ததாக அணி நிர்வாகம் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது. அத்துடன் ராகுல் டிராவிட்டிற்கு அணி கட்டமைப்பு தொடர்பான உயர்பதவி கொடுக்கப்பட்டும் அதை அவர் நிராகரித்ததாக தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து கேப்டன் சஞ்சு சாம்சன் விலகுவதாக தகவல் பரவிய நிலையில், ராகுல் டிராவிட் விலகல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சஞ்சுவுடன் சேர்ந்து டிராவிட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை நியமித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் 2025 ஐபிஎல் தொடரில் படுமோசமாக செயல்பட்ட ராஜஸ்தான் 14 போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றிபெற்று 9வது இடத்தில் முடித்தது. இந்த சூழலில் எதிர்கால அணிக்காக கட்டமைப்பு மதிப்பாய்வை சமீபத்தில் நிகழ்த்திய ராஜஸ்தான் அணி, ராகுல் டிராவிட் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
August 31, 2025 1:21 PM IST


