ராஜஸ்தான் அணி பெங்களுருவை தோற்கடித்ததற்கு பயிற்சியாளர்கள் தான் முக்கிய காரணம் என்று அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வி அடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் வலுவான பெங்களூரு அணியை நேற்று எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி விறுவிறுப்பான ஆட்டத்துக்கு மத்தியில் 19 ஆவது ஓவர் முடிவில் வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் அடுத்த சுற்றான குவாலிஃபயர் 2 போட்டிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முன்னேறியுள்ளது.
நாளை சென்னையில் நடைபெற உள்ள இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கிடையே எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்றது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது-
கிரிக்கெட்டிலும் சரி. வாழ்க்கையிலும் சரி. மோசமான தருணங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியது வரும். ஆனால் முக்கியமானது என்னவென்றால் எல்லா சவால்களையும் எதிர்கொண்டு முன்னுக்கு வருவது தான். பெங்களூருக்கு எதிரான போட்டிக்கு முன்பு நாங்கள் 4 போட்டிகளில் தோல்வி அடைந்தோம்.
இருப்பினும் எலிமினேட்டர் போட்டியில் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த வெற்றிக்கு பயிற்சியாளர்கள் சங்கக்காரா மற்றும் ஷேன்பாண்ட் முக்கிய காரணமாக இருந்தனர். அவர்கள் ஹோட்டல் அறையில் இருந்து கொண்டு நீண்ட நேரமாக வியூகங்களை வகுத்தனர்.
பேட்டிங் வரிசையில் இளம் வீரர்கள் இடம்பெற்று இருந்தார்கள். ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜுரல் ஆகியோர் 22 வயது உடையவர்களே. அவர்களுக்கு போதுமான அனுபவம் கிடையாது. இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)