சிறிலங்கா ராஜபக்சக்களின் அரசியல்வாரிசான நாமல்பேபிக்கு பிரித்தானியாவில் கிட்டிய மூக்குடைவு அந்த அதிகாரமையத்தின் விட்டகுறை – தொட்டகுறை அல்லக்கைகளை இப்போது சமுகவலைத்தளங்களில் கடுமையாக அலறவும் கூப்பாடுபோடவும் வைக்கிறது.
அந்த வகையில் ஐயயோ ஒக்ஸ்போர்ட்- கேம்பிரிஜ் வடைகள் போச்சே! என்ற குய்யோ முறையோ குரல்கள் லண்டன் முதல் அனுராதபுரம் வரை சமுகவலைத்தளங்களில் காட்டுக்கத்தல் காணொளிகளாக வருகின்றன.
நாமல் யார் தெரியுமா? அவர் தமிழர்களின் போரியல் முதுகெலும்பை உடைத்த சிங்களச்சிங்கம் மகிந்தவின் புத்திரயோ எனவும் சிறிலங்காவின் எதிர்கால அரசதலைவர் எனவும் ஆவேசமான காடடுக்கத்தல்கள் வருகின்றன.
இவ்வாறான பூச்சாண்டி அலறல்கள் கண்டு புலம்பெயர் தமிழ் சமுகத்தில் உள்ள சில புலிக்காய்ச்ல் தமிழ்முகங்களோ நாமலின் உரைக்கு அனுமதிமறுக்ப்படடடதால் இலங்கையில் மீண்டும் இனவாதத்தை கிளம்புமே என்ற ஒலங்களை எழுப்பத்தலைப்படுகின்றன.
ஆனால் ஒருவரின் கருத்துரிமையை மறுதலிப்பதற்கோ அல்லது இனவாத அடிப்படையிலேயோ நாமலின் உரைநிகழ்வை நிறுத்தக்கோரும் இந்த எதிர்ப்பு வெளிப்படவில்லை. மாறாக அவர்களின் கடந்தகால குற்றப்பின்னணிகள் மற்றும் கொடுமைகள் சார்ந்தே இது வெளிப்பட்டது.
அந்த வகையில் நாமலுக்கு வெளிப்பட்ட எதிர்ப்பு உணர்வு அடையாளத்துக்கு ஆபத்துவரும் போது அதனை எதிர்க்கும் தமிழ் தேசிய உணர்வு சார்ந்தது.
இது உலகளாவிய நியதியும் கூட. இந்த நியதியால் தான். உக்ரெய்ன் படையெடுத்த ரஸ்யா சார்ந்த தலைகளுக்கும் காசா மீது படுகொலைகளை செய்த இஸ்ரேலிய முகங்களுக்கும் சில அரங்கங்கள் மறுக்கப்படுகின்றன.
இதற்கிடையே ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் விவாத சங்கங்களில் தனது உரைகள் மீளெடுக்கப்பட்டதை கண்டிக்கு நாமல் ராஜபக்ச
கழுவேறத்துணிந்த நீலி கண் மைஎரிகிறது என சொன்ன கதையை நினைவூட்டும் நிலையில் இந்தவிடயங்களை தழுவி வருகிறது செய்திவீச்சு…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

