பிகாரின் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நாள்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்றும் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி,
வாக்குத் திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உண்மையைத் தெரிவிக்க வேண்டும். ராகுல் காந்தி எந்த தாக்குதலுக்கும் பயப்படமாட்டார். அவர் எல்லாவற்றையும் சமாளிப்பார். ஒருபோதும் பின்வாங்கமாட்டார். ராகுல் காந்தியால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை. மாறாக, பிரமாணப் பத்திரம், நேரு, இந்திரா என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

