Last Updated:
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 ஆட்டத்தில் விளையாடியபோது அந்த சாதனையை சல்மான் அலி ஆகா ஏற்படுத்தினார்
ராகுல் டிராவிட்டின் சாதனையை டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா முறியடித்துள்ளார்.
பாகிஸ்தான் டி20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா, ஒரே ஆண்டில் அதிக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதன் மூலம் இந்திய லெஜெண்ட் ராகுல் டிராவிட் வைத்திருந்த சாதனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
அதாவது ராகுல் டிராவிட் 1999 ஆம் ஆண்டில் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 53 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியதே சாதனையாக இருந்தது. அதன்பின்னர், பாகிஸ்தானின் முகமது யூசுப் (2000) மற்றும் இந்தியாவின் மகேந்திர சிங் தோனி (2007) ஆகியோரும் தலா 53 ஆட்டங்களில் விளையாடி இந்தச் சாதனையைச் சமன் செய்திருந்தனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 ஆட்டத்தில் விளையாடியபோது அந்த அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா அதிக போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த போட்டி நடப்பு ஆண்டில் அவரது 54 ஆவது போட்டியாக அமைந்தது. இதன் மூலம், ஒரே ஆண்டில் அதிக சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அவர் ராகுல் டிராவிட், முகமது யூசுப் மற்றும் தோனி ஆகியோரிடம் இருந்து முறியடித்து வரலாறு படைத்துள்ளார்.
November 24, 2025 8:40 PM IST


