ராஃபிள்ஸ் சிட்டி டவருக்கு வெளிப்பகுதியில் கொண்டலா என்னும் தொங்கும் படியில் சிக்கிக்கொண்ட 2 ஊழியர்கள் மீட்கப்பட்டனர்.
இன்று (ஜூலை 21) காலை 11.20 மணியளவில் உயரத்தில் சிக்கிக்கொண்ட ஊழியர்கள் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் கொடுக்கப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய 3 அம்சங்கள் – மனிதவள துணை அமைச்சர் அறிவிப்பு
சிக்கிய ஊழியர்கள்
அந்த கட்டிடத்தின் 28வது மற்றும் 29வது மாடிகளுக்கு இடையில் கொண்டலா செங்குத்தாக சிக்கி கொண்டதாக சொல்லப்பட்டுள்ளது.
DART பேரிடர் மீட்புக் குழுவினர், 29வது மற்றும் 30வது மாடியில் மீட்பு உபகரணங்களை பொருத்தி பத்திரமாக ஊழியர்களை மீட்டனர்.
ஊழியர்கள் பாதுகாப்பு கவசங்களை அணிந்து இருந்ததாகவும், அவர்கள் 29 மற்றும் 30வது மாடிகளில் உள்ள ஜன்னல்கள் வழியாக கட்டிடத்திற்குள் கொண்டு வரப்பட்டதாகவும் SCDF தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
துணை மருத்துவர் குழு இரண்டு ஊழியர்களையும் பரிசோதித்தனர்.
பின்னர் அவர்கள் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் SCDF கூறியது.
அந்த கட்டிடத்தின் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் வழக்கமான முகப்பு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டிருந்தனர், அப்போது வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
இதனால் கொண்டலா ஒரு பக்கமாக சாய்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு உடனடியாக வேலை நிறுத்த உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
ஒர்க் பெர்மிட் அனுமதியுடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR மற்றும் குடியுரிமை வழங்கப்படுவதில்லை ஏன் ?
Photo SS from Singapore Incidents