• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ரஹானே, ரிங்கு சிங் அதிரடிக்கு பலன் இல்லாமல் போனது: 4 ரன் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது கொல்கத்தா | KKR vs LSG match in ipl 2025 explained

GenevaTimes by GenevaTimes
April 9, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ரஹானே, ரிங்கு சிங் அதிரடிக்கு பலன் இல்லாமல் போனது: 4 ரன் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது கொல்கத்தா | KKR vs LSG match in ipl 2025 explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


​கொல்​கத்தா: ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் நடப்பு சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யிடம் போராடி தோல்வி அடைந்​தது. கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நேற்று பிற்​பகலில் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 238 ரன்​கள் குவித்​தது. தொடக்க வீரர்​களான எய்​டன் மார்க்​ரம், மிட்​செல் மார்ஷ் ஜோடி அதிரடி​யாக விளை​யாடியது. எய்​டன் மார்க்​ரம் 28 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 47 ரன்​கள் விளாசிய நிலை​யில் ஹர்​ஷித் ராணா பந்​தில் போல்​டா​னார். முதல் விக்​கெட்​டுக்கு எய்​டன் மார்க்​ரம், மிட்​செல் மார்ஷ் ஜோடி 10.4 ஓவர்​களில் 99 ரன்​கள் குவித்​தது.

இதையடுத்து களமிறங்​கிய நிகோலஸ் பூரன், மிட்​செல் மார்​ஷுடன் இணைந்து வாணவேடிக்கை நிகழ்த்​தி​னார். 36 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் தனது 7-வது அரை சதத்தை விளாசி​னார் மிட்​செல் மார்​ஷ். நடப்பு சீசனில் இது அவரது 4-வது அரைசத​மாக அமைந்​தது. தொடர்ந்து வருண் சக்​ர​வர்த்தி வீசிய 14-வது ஓவரில் மிட்​செல் மார்​ஷ், நிகோலஸ் பூரன் ஆகியோர் தலா ஒரு சிக்​ஸர் பறக்​க​விட்​டனர்.

சுனில் நரேன் வீசிய 15-வது ஓவரில் 2 சிக்​ஸர்​களை விளாசி​னார் நிகோலஸ் பூரன். மறு​முனை​யில் அதிரடி​யாக விளை​யாடி வந்த மிட்​செல் மார்ஷ் 48 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 81 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஆந்த்ரே ரஸ்​ஸல் பந்தை டீப் பாயிண்ட் திசை​யில் விளாசிய போது ரிங் சிங்​கிடம் கேட்ச் ஆனது. 2-வது விக்​கெட்​டுக்கு மிட்​செல் மார்​ஷ், நிகோலஸ் பூரன் ஜோடி 30 பந்​துகளில் 71 ரன்​கள் சேர்த்​தது.

இதன் பின்​னர் அப்​துல் சமத் களமிறங்க ஹர்​ஷித் ராணா வீசிய 17-வது ஓவரில் நிகோலஸ் பூரன் 2 இமாலய சிக்​ஸர்​களை அடித்​தார். இதையடுத்து ஆந்த்ரே ரஸ்​ஸல் வீசிய 18-வது ஓவரில் நிகோலஸ் பூரன் 3 பவுண்​டரி​கள், 2 சிக்​ஸர்​களு​டன் 24 ரன்​களை வேட்​டை​யாடி​னார். மட்​டையை சுழற்​றிய நிகோலஸ் பூரன் 21 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் அரை சதம் கடந்​தார்.

ஐபிஎல் தொடரில் இது அவரது 12-வது அரை சதமாக அமைந்​தது. நிதான​மாக விளை​யாடி அப்​துல் சமத் 6 ரன்​னில் ஹர்​ஷித் ராணா பந்​தில் நடையை கட்​டி​னார். நிகோலஸ் பூரன் 36 பந்​துகளில், 8 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 87 ரன்​கள் விளாசி ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். டேவிட் மில்​லர் 4 பந்​தில் 4 ரன்​கள் சேர்த்​தார்.

கொல்​கத்தா அணி தரப்​பில் ஹர்​சித் ராணா 51 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றி​னார். 239 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த கொல்​கத்தா அணிக்கு சுனில் நரேன் அதிரடி தொடக்​கம் கொடுத்​தார். அதேவேளை​யில் குயிண்​டன் டி காக் 9 பந்​தில் 15 ரன் எடுத்த நிலை​யில் ஆகாஷ்தீப் பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார். இதன் பின்​னர் களமிறங்​கிய கேப்​டன் அஜிங்க்ய ரஹானே மட்​டையை சுழற்​றி​னார்.

இதனால் பவர்​பிளே​வில் கொல்​கத்தா அணி 90 ரன்​கள் குவித்​தது. அதிரடி​யாக விளை​யாடிய சுனில் நரேன் 13 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 30 ரன்​கள் எடுத்த நிலை​யில் திக்​வேஷ் ராத்தி பந்தை சிக்​ஸருக்கு விளாச முயன்று ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து களமிறங்​கிய வெங்​கடேஷ் ஐயர், ரஹானேவுடன் இணைந்து அதிரடி​யாக விளை​யாட கொல்​கத்தா அணி 7.2 ஓவர்​களி​லேயே 100 ரன்​களை எட்​டியது. இதனால் கொல்​கத்தா அணி இலக்கை சிரமம் இல்​லாமல் எட்​டிப்​பிடிக்​கும் என கருதப்​பட்​டது.

அஜிங்க்ய ரஹானே 26 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் அரை சதம் கடந்​தார். 40 பந்​துகளில் 71 ரன்​கள் சேர்த்த இந்த ஜோடியை ஷர்​துல் தாக்​குர் பிரித்​தார். ரஹானே 35 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 61 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஷர்​துல் தாக்​குர் பந்தில் ஆட்டமிழந்தார்.

இது திருப்பு முனையை ஏற்​படுத்​தி​யது. அப்​போது கொல்​கத்தா அணி 13 ஓவர்​களில் 162 ரன்​கள் எடுத்​திருந்​தது. 7 ஓவர்​களில் வெற்​றிக்கு 77 ரன்​கள் தேவை​யாக இருந்​தது. இதன் பின்​னர் களமிறங்​கிய ரமன்​தீப் சிங் (1), அங்க்​ரிஷ் ரகு​வன்ஷி (5) ரன்​களில் நடையை கட்​டினர். வெங்​கடேஷ் ஐயர் 29 பந்​துகளில், 45 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஆகாஷ் தீப் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

கடைசி 4 ஓவர்​களில் வெற்​றிக்கு 54 ரன்​கள் தேவைப்​பட்ட நிலை​யில் ஆந்த்ரே ரஸ்​ஸல் 7 ரன்​களில் ஷர்​துல் தாக்​குல் பந்​தில் நடையை கட்​டி​னார். இதன் பின்​னர் ஹர்​ஷித் ராணாவுடன் இணைந்து ரிங்கு சிங் போராடி​னார். ரவி பிஷ்னோய் வீசிய கடைசி ஓவரில் வெற்​றிக்கு 24 ரன்​கள் தேவை​யாக இருந்​தன.

முதல் பந்தை ஹர்​ஷித் ராணா பவுண்​டரிக்கு விரட்ட அடுத்த பந்தை வீணடித்​தார். 3-வது பந்​தில் ஒரு ரன் சேர்க்​கப்​பட்​டது. இதனால் 3 பந்​துகளில் 19 ரன்​கள் தேவை என நெருக்​கடி அதி​க​மானது. 3 சிக்​ஸர்​களை அடித்​தால் ஆட்​டம் சூப்​பர் ஓவருக்கு செல்​லும் என்ற நிலை​யில் அடுத்​தடுத்து பந்​துகளை பவுண்​டரிக்கு விரட்​டிய ரிங்கு சிங் கடைசி பந்தை சிக்​ஸருக்கு விளாசி​னார்.

ஆனால் அது வெற்​றிக்கு போது​மான​தாக இல்​லை. முடி​வில் கொல்​கத்தா அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 234 ரன்​கள் எடுத்து தோல்வி அடைந்​தது. ரிங்கு சிங் 15 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 38 ரன்​களும், ஹர்​ஷித் ராணா 9 பந்​துகளில், 10 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். லக்னோ அணி தரப்​பில் ஆகாஷ் தீப், ஷர்​துல் தாக்​குர் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். ஆட்ட நாயக​னாக நிகோலஸ் பூரன் தேர்​வா​னார். 4 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற லக்னோ அணி நடப்பு சீசனில் 3-வது வெற்​றியை பதிவு செய்​தது.



Read More

Previous Post

Rising Bharat Summit 2025: ”மீண்டும் மீண்டும் சொல்கிறேன் தமிழ்நாட்டில் பாஜக வெல்லும்” – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Next Post

Premium Credit Card | பிரீமியம் கிரெடிட் கார்டுகளின் சேமிப்புகளை எப்படி அதிகப்படுத்தலாம்…?

Next Post
Premium Credit Card | பிரீமியம் கிரெடிட் கார்டுகளின் சேமிப்புகளை எப்படி அதிகப்படுத்தலாம்…?

Premium Credit Card | பிரீமியம் கிரெடிட் கார்டுகளின் சேமிப்புகளை எப்படி அதிகப்படுத்தலாம்…?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin