ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த பல இளைஞர்களும் ரஷ்ய ராணுவத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் இந்தியாவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் உக்ரைன் உடனான போரின் உயிரிழந்தனர்.
இதையடுத்து, இந்தியர்களை ரஷ்ய ராணுவத்தில் வேலைக்கு சேர்ப்பதை தவிர்க்குமாறு, மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், போரின்போது 2 இந்தியர்கள் கொல்லப்பட்டதை அறிந்து வருந்துவதாகவும், ரஷ்யாவில் வேலை தேடும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
Also Read :
தந்தையின் 1 வருட சம்பளத்தில் விமான டிக்கெட் – மனம் திறந்த சுந்தர் பிச்சை!
அத்துடன், ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் சேர்க்கப்படுவதை தடுத்து நிறுத்த, உரிய சோதனைகளை செய்ய வேண்டும் என்றும், தற்போது சேர்க்கப்பட்டுள்ள இந்தியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் இந்திய தூதரகம் ரஷ்யாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதேபோல், டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவை ரஷ்ய அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருப்பதோடு, இந்தியர்களை ரஷ்ய ராணுவத்தில் சேர்ப்பது இருதரப்பு உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவின் கோரிக்கையை விரைவில் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக, ரஷ்யா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
