ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகங்களில் ஒன்றின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அமெரிக்கா முன்னிலையில் ரஷ்யா – உக்ரைன் இடையே ஜெனீவாவில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது.
இந்நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உள்கட்டமைப்புகள் சேதம்
இதில் ரஷ்யாவின் கிராஸ்னோடர் பிராந்தியத்தில் உள்ள தமன் துறைமுகத்தில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.

மறுபுறம் உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் எரிசக்தி, குடிநீர் விநியோகம் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புகள் கடும் சேதமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அங்கு மின் விநியோகம் முழுவதுமாகத் தடைபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யாவின் பிடிவாதம்
முன்னதாக, ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பேசிய உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஸெலென்ஸ்கி, “ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் மட்டுமே தொடர்ந்து சமரசம் செய்துகொள்ள வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது.

ரஷ்யாவின் பிடிவாதத்தைப் பற்றி விவாதிக்காமல், உக்ரைனை மட்டும் குறிவைப்பது சரியான முறையல்ல.
தற்போது இந்தப் பிரச்சினையிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகள், வருங்காலங்களில் முக்கியப் பங்காற்ற வேண்டும்” எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

