Last Updated:
விளாதிமிர் புதின் இல்லத்தின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் முயற்சி கவலையளிப்பதாக நரேந்திர மோடி தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் இல்லத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்த முயன்றதாக ரஷ்யா தரப்பில் கூறப்பட்ட நிலையில், இந்த சம்பவம் கவலையளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவில் உள்ள புதினின் வீட்டின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார். மொத்தம் 91 டிரோன்களை ரஷ்ய படைகள் தாக்கி அழித்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், எந்த பொருட் சேதமும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை உக்ரைன் அரசு மறுத்திருக்கிறது.
இந்நிலையில், புதின் வீட்டின் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்ததாக வெளியாகி உள்ள தகவல் கவலையளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தற்போது இரு நாட்டிற்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை, விரோதத்தை முடிவுக்கு கொண்டு வந்து அமைதிக்கு வழிவகுக்கும் என்பதால், அதில்தான் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையை மட்டுப்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையிலும் இரு நாடுகளும் ஈடுபட வேண்டாம் எனவும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.


