• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ரஷ்ய அதிபர் புதினின் கழிவை சேகரித்த பாதுகாவலர்கள்… அமெரிக்காவில் நடந்தது என்ன? | உலகம்

GenevaTimes by GenevaTimes
August 18, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
ரஷ்ய அதிபர் புதினின் கழிவை சேகரித்த பாதுகாவலர்கள்… அமெரிக்காவில் நடந்தது என்ன? | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 18, 2025 9:51 PM IST

அமெரிக்க வந்த ரஷ்ய அதிபர் புதினின் மலத்தைச் சேகரிக்க அவரது பாதுகாவலர்கள் தனியாக ஒரு சூட்கேஸை வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதின் புதின்
புதின்

அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த அலாஸ்கா வந்த ரஷ்ய அதிபர் புதினின் மலத்தைச் சேகரிக்க அவரது பாதுகாவலர்கள் தனியாக ஒரு சூட்கேஸை வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 3 ஆண்டுகளைக் கடந்து நீடிக்கும் ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதில் முக்கிய அம்சமாக, ரஷ்ய அதிபர் புதினை அமெரிக்காவின் அலாஸ்காவிற்கு அழைத்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். தனது சிறப்பு விமானத்தில் அலாஸ்கா சென்ற புதினுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தார். சந்திப்பு நடைபெற இருந்த இடத்திற்கு இருவரும் ஒரே காரில் உற்சாகமான முகத்துடன் பயணித்தனர்.

இருவரும் தனியே சந்திப்பார்கள் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசிக்கட்டத்தில் இரண்டு தரப்பிலும் தலா 3 அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். மூடிய கதவுகளுக்குப் பின்னால் சுமார் 3 மணிநேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் புதின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்களின் பின்னணியில் சமாதானத்தைத் தொடர்தல் என்று எழுதப்பட்டு இருந்தது. முதலில் புதினைப் பேசுமாறு டிரம்ப் சைகை காட்டினார். அதன்படி, தனது பேச்சைத் தொடங்கிய புதின், டிரம்ப் உடனான சந்திப்பு தாமதமாக நடந்த ஒன்று என்று குறிப்பிட்டார். போர் மூண்டதற்கான முதன்மை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று புதின் தெரிவித்தார். அதாவது நேட்டோவில் உக்ரைன் இணைவது தொடர்பான பிரச்னைக்கு தீர்வு தேவை என்று புதின் வலியுறுத்தினார்.

பின்னர் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தச் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாகக் குறிப்பிட்டார். ஆனால், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பு நிறைவடைவதற்கு முன்பு, மிக விரைவில் மீண்டும் சந்திப்போம் என்று டிரம்ப் கூறினார். அதற்கு, அடுத்த முறை மாஸ்கோவில் என்று புதின் ஆங்கிலத்தில் பதில் அளித்தார். இருவரும் சுமார் 10 நிமிடங்கள் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், எந்தக் கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். பின்னர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த டிரம்ப், உடன்பாட்டிற்கு உக்ரைன் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைக்காக அலாஸ்கா வந்த ரஷ்ய அதிபர் புதினின் மலத்தைச் சேகரிக்க அவரது பாதுகாவலர்கள் தனியாக ஒரு சூட்கேஸை வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் கூறப்பட்டது. இதனால் அவரது மலத்தைப் பரிசோதனை செய்யலாம் என்ற அச்சத்தில் அவரது பாதுகாவலர்கள் அதனைச் சேகரிக்க தனியாக ஒரு சூட்கேஸை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நடைமுறையை அதிபர் புதினின் சிறப்பு பாதுகாப்புப் படை 2017-ஆம் ஆண்டில் இருந்தே பின்பற்றி வருவதும் தெரியவந்துள்ளது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

August 18, 2025 9:51 PM IST

Read More

Previous Post

நாளொன்றுக்கு 2 மில்லியன் பீப்பாய்: ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி! | 2 million barrels per day India oil import from Russia

Next Post

ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலையில் காரில் இருந்து குதிக்கும் பெண்ணின் வைரலான வீடியோவை விசாரித்து வரும் போலீசார் | Makkal Osai

Next Post
ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலையில் காரில் இருந்து குதிக்கும் பெண்ணின் வைரலான வீடியோவை விசாரித்து வரும் போலீசார் | Makkal Osai

ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலையில் காரில் இருந்து குதிக்கும் பெண்ணின் வைரலான வீடியோவை விசாரித்து வரும் போலீசார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin