Last Updated:
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்த நிலையில், ராகுல் காந்தி தனக்கு சந்திக்க அனுமதி மறுத்ததாக மத்திய அரசை குற்றம்சாட்டினார்.
ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க தனக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்களை எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பது மன்மோகன் சிங், வாஜ்பாய் காலந்தொட்டு நடைமுறையில் இருந்து வரும் நிலையில், தற்போதைய பாஜக அரசு, தனக்கு அனுமதி மறுப்பதாகக் கூறினார்.
இந்நிலையில், வெளிநாட்டு பயணங்களின் போதும், எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்கக் கூடாது என மத்திய அரசு கூறியதாக அந்நாட்டு பிரதிநிதிகள் தன்னிடம் தெரிவித்ததாக ராகுல் காந்தி குறிப்பிட்டார். இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பணிகளில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் பங்கு இருப்பதாக கூறிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத் துறைக்கு தன்னம்பிக்கை இல்லாததே வெளிநாட்டுத் தலைவர்களை சந்திக்க மறுப்பதற்கு காரணம் எனவும் கூறினார்.
Delhi,Delhi,Delhi
December 04, 2025 5:45 PM IST
“ரஷ்ய அதிபரை சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது..” மத்திய அரசு மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு


