ரஷ்ய அதிபராக மீண்டும் தேர்வாகியுள்ள விளாடிமிர் புதினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபராக விளாமிர் புதின் 87 சதவிகித வாக்குகளுடன் 5ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா அதிபரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
ரஷ்ய மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக தனது வாழ்த்துகளை மோடி தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மற்றும் சலுகையை வலுப்படுத்த இருதலைவர்களும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டனர். ரஷ்யா உக்ரைன் இடையிலான மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.
Spoke with President Putin and congratulated him on his re-election as the President of the Russian Federation. We agreed to work together to further deepen and expand India-Russia Special & Privileged Strategic Partnership in the years ahead. @KremlinRussia
— Narendra Modi (@narendramodi) March 20, 2024
மேலும் இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…