• Login
Monday, September 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரஷ்யா உடன் போர் தொடர.. ஆபாச படங்கள் மூலம் வருமானம் ஈட்ட உக்ரைன் முடிவு! | Ukraine Considers Legalizing Adult Content to Raise $25M for War Effort and Military Drones

GenevaTimes by GenevaTimes
September 7, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரஷ்யா உடன் போர் தொடர.. ஆபாச படங்கள் மூலம் வருமானம் ஈட்ட உக்ரைன் முடிவு! | Ukraine Considers Legalizing Adult Content to Raise $25M for War Effort and Military Drones
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரஷ்யா உடன் போர் தொடர.. ஆபாச படங்கள் மூலம் வருமானம் ஈட்ட உக்ரைன் முடிவு!

ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான போர் பல ஆண்டுகளாக தொடரும் வேளையில், உக்ரைன் நாட்டின் பொருளாதாரம், நிதி நிலை என்பது நாளுக்கு நாள் மோசமாகி வரும் வேளையில் ரஷ்யாவுடன் தொடர்ந்து போரிட வேண்டும் என்பதற்காக புதிய நிதிஆதாரத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் நாடாளுமன்றம், அந்நாட்டில் ஆபாச பட துறையை ஒரு சட்டப்பூர்வமாக அனுமதித்து, முழுமையான வர்த்தக துறையாக மாற்றும் மசோதா குறித்து ஆலோசனை செய்து வருகிறது. இதன் மூலம் தற்போது முறையற்ற, சட்டத்தால் அனுமதிக்காத துறையாக இருக்கும் ஆபாச பட துறையை ஒப்புதல் அளிக்கப்பட்ட வர்த்தக துறையாக மாற்றப்படுவது மூலம் வரி கட்டமைப்புக்குள் கொண்டு வர முடியும்.

ரஷ்யா உடன் போர் தொடர.. ஆபாச படங்கள் மூலம் வருமானம் ஈட்ட உக்ரைன் முடிவு!

இந்தத் துறைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டால், இத்துறையில் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து உக்ரைன் அரசால் வரி வசூலிக்க முடியும் என்பது தான் இந்த மசோதாவின் அடிப்படை.

உக்ரைன் நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களின் கணிப்புப்படி, ஆபாச பட துறையை முழுமையான ஒப்புதல் பெற்ற அரசு துறையாக மாற்றினால் இத்துறையின் வாயிலாக ஆண்டுக்கு சுமார் 25 மில்லியன் டாலர் வரை வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வருவாயை ரஷ்யாவுக்கு எதிரான போருக்கான நிதி ஆதாரமாக பயன்படுத்த முடியும் எனவும் அந்நாட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

இந்த முக்கியமான மசோதாவை உக்ரைன் நாடாளுமன்றத்தின் நிதியியல் குழுவின் தலைவரான Yaroslav Zhelezniak ஒப்புதலுடன் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது, மேலும் இந்த மசோதாவில் 25 மில்லியன் டாலர் மூலம் 30000 டிரோன்களை வாங்கி ரஷ்யாவுக்கு எதிராக போர் செய்ய முடியுமென குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த மசோதா ஜூலை மாதம் முதல்கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் அடுத்தக்கட்ட ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. தற்போது வரையில் உக்பைன் நாட்டில் ஆபாச பட துறை என்பது தடை செய்யப்பட்ட துறையாகவே இருந்து வருகிறது, இத்துறையில் ஈடுப்படுவோருக்கு 7 வருடம் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

இத்தகைய கடுமையான சட்ட திட்டங்கள் இருந்தாலும், உக்ரைன் நாட்டில் ஆபாச பட துறை என்பது வேகமாக வளர்ந்து வருகிறது. OnlyFans நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் படி சுமார் 7900 உக்ரைன் நாட்டினர் இத்தளத்தில் இருப்பதாகவும், இவர்கள் 2023ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 131 மில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

சமீபத்தில் உக்ரைன் நாட்டின் பிரபலமான ஆபாச நடிகை கைது செய்யப்பட்ட போது, தான் ஆபாச படத்தில் நடிப்பது தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை என்றும், 900,000 டாலர் தொகையை அரசுக்கு வரியாக செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆபாச நடிகை கொடுத்த பெட்டிஷன் உக்ரைன் நாட்டில் பெரும் பேசுபொருளானதன் விளைவாக தற்போது இத்துறையை முழுமையான வர்த்தக துறையாக மாற்றும் மசோதா தற்போது பேசப்பட்டு வருகிறது.

Share This Article

English summary

Ukraine Considers Legalizing Adult Content to Raise $25M for War Effort and Military Drones

Ukraine Considers Legalizing Adult Content to Raise $25M for War Effort and Military Drones — ரஷ்யா உடன் போர் தொடர.. ஆபாச படங்கள் மூலம் வருமானம் ஈட்ட உக்ரைன் முடிவு!

Story first published: Monday, September 7, 2026, 12:15 [IST]

Other articles published on Sep 7, 2026

Read More

Previous Post

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட இருக்கும் மத்திய அரசு – அதிரடியாக உயரும் அகவிலைப்படி | இந்தியா போட்டோகேலரி

Next Post

"ஈரான் போர் முடிய 3 Optionsதான் இருக்கு; அவற்றில் ஒன்றை ட்ரம்ப் செய்யமாட்டார்" – அமெரிக்க அதிகாரி

Next Post
"ஈரான் போர் முடிய 3 Optionsதான் இருக்கு; அவற்றில் ஒன்றை ட்ரம்ப் செய்யமாட்டார்" – அமெரிக்க அதிகாரி

"ஈரான் போர் முடிய 3 Optionsதான் இருக்கு; அவற்றில் ஒன்றை ட்ரம்ப் செய்யமாட்டார்" - அமெரிக்க அதிகாரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin