Last Updated:
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரில் இந்தியா அமைதியின் பக்கமே நிற்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரில் இந்தியா அமைதியின் பக்கமே நிற்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் பிரதமர் மோடியும் புதினை கைகளை குலுக்கி வரவேற்றனர். பின்னர் குடியரசு தலைவர் மாளிகை வளாகத்தில் புதினுக்கு இந்திய முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அங்கிருந்து ராஜ்காட்டிற்கு சென்ற புதின், மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ராஜ்காட்டில் பார்வையாளர் புத்தகத்தில் புதின் கையெழுத்திட்டார். பின்னர், ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதினும் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரில் இந்தியா அமைதியின் பக்கமே நிற்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேலும் அமைதிக்கான முயற்சிகளுக்கு இந்தியா தோளோடு தோள் கொடுக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
Delhi,Delhi,Delhi
December 05, 2025 5:35 PM IST


