• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ரஷ்யா – உக்ரைன் போரின் முடிவுகள் 2 வாரங்களில் தெரிந்துவிடும் – அதிபர் டிரம்ப் | உலகம்

GenevaTimes by GenevaTimes
August 19, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
ரஷ்யா – உக்ரைன் போரின் முடிவுகள் 2 வாரங்களில் தெரிந்துவிடும் – அதிபர் டிரம்ப் | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 19, 2025 8:35 AM IST

ரஷ்யா – உக்ரைன் போரின் முடிவுகள் 2 வாரங்களில் தெரிந்துவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜெலன்ஸ்கி - டிரம்ப்ஜெலன்ஸ்கி - டிரம்ப்
ஜெலன்ஸ்கி – டிரம்ப்

ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த 3 வருடங்களுக்கு மேல் நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்துமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்துப் பேசினார். அதைத்தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இத்தாலி பிரதமர் மெலோனி, நேடோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே உள்ளிட்டோருடன் டிரம்ப் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க – ரஷ்யா – உக்ரைன் அதிபர்கள் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும், இதற்கு ரஷ்ய அதிபர் புதின் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் டிரம்ப் அறிவித்தார். மேலும் ரஷ்யா – உக்ரைன் போரின் முடிவுகள் 2 வாரங்களில் தெரிந்துவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளின் நிதி உதவியுடன் அமெரிக்காவிடம் இருந்து 7 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்வது குறித்தும் டிரம்புடன் ஆலோசனை நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

இதனிடையே அமெரிக்க அதிபர் உடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து ரஷ்ய அதிபர் புதின் பேசினார். உக்ரைன்- ரஷ்யா போர் தொடர்பாக அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை ரஷ்ய அதிபர் புதின் சந்தித்து பேசினார். இந்நிலையில், டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடியிடம் புதின் பேசியுள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் உடனான சந்திப்பு குறித்து தன்னுடன் பகிர்ந்து கொண்ட புதினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் உடனான மோதலுக்கு ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், இது தொடர்பான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா- ரஷ்யா இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் பிரதமர் மோடியுடன் புதின் ஆலோசித்தார்.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

August 19, 2025 8:35 AM IST

Read More

Previous Post

பிரதமரின் ஜிஎஸ்டி குறைப்பு அறிவிப்பால் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு | Sensex rises 1000 points after Prime Minister GST reduction announcement

Next Post

மனைவியின் 28 வயது காதலனை கத்தியால் குத்தியதாக சமையல்காரர் மீது குற்ற | Makkal Osai

Next Post
மனைவியின் 28 வயது காதலனை கத்தியால் குத்தியதாக சமையல்காரர் மீது குற்ற | Makkal Osai

மனைவியின் 28 வயது காதலனை கத்தியால் குத்தியதாக சமையல்காரர் மீது குற்ற | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin