ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் பிக்னிக் எனும் இசைக் குழுவினர் நேற்று இரவு இசைக் கச்சேரியை நடத்தினர். அப்போது அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று, நிகழ்ச்சி நடக்கும் அரங்குக்குள் புகுந்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கையெறி குண்டுகளையும் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கின்றனர்.
தாக்குதலை நடத்திவிட்டு அந்த கும்பல் தப்பித்து சென்றுவிட்டதாகக் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில், இரவு முழுவதும் மீட்புப்பணிகள் நடந்திருக்கின்றன. ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா,“கொடூரமான இந்தக் குற்றச்சம்பவத்தை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இதற்கிடையில், இந்த தாக்குதல் குறித்து டெலிகிராம் குழுவில் அறிக்கை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதக் குழு இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருக்கிறது.
அதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன்,“இந்த மாதத்தின் தொடக்கத்தில், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இசை நிகழ்ச்சி போன்ற பெரிய கூட்டங்களைக் குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது என, ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு பொது அறிக்கையை வெளியிட்டிருந்தோம். அமெரிக்க அரசும் இந்தத் தகவலைப் பகிர்ந்தது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY