வடகொரியா – ரஷ்யா பிணைப்பு!
கடந்த பிப்ரவரி 2022ல் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு படையெடுப்பு தொடங்கப்பட்டதிலிருந்து, ரஷ்யா 10 லட்சத்துக்கும் மேலான வீரர்களை இழந்துள்ளதாக உக்ரைனின் தரவுகள் கூறுகின்றன.
இந்த வார தொடக்கத்தில் கிம் ஜாங்-உன் மாஸ்கோவுக்கு அளித்த செய்தியில், எந்த சூழலிலும் வடகொரியா ரஷ்யாவுடன் துணை நிற்கும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.
ரஷ்ய தின கொண்டாட்டத்தில், கிம் ஜாங்-உன்னை “அன்பான தோழர்’ என அழைத்தார் புதின். “தோழர்களுக்கு இடையேயான உண்மையான உறவு,” என்று தங்கள் நட்பை பரைசாற்றினார்.
“வடகொரியா-ரஷ்யா உறவை தொடர்ந்து முன்னெடுப்பது DPRK அரசு மற்றும் என்னுடைய சொந்த விருப்பமுமாகும்” என கிம் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

