ரஷ்யாவில் மாயமான ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில், அதில் பயணித்த 22 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் உள்ள வச்கஜெட்ஸ் எரிமலையின் அருகே இருந்து 19 சுற்றுலா பயணிகள் மற்றும் 3 பணியாளர்களுடன் ஒரு எம்ஐ-8 ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. ஆனால் ஹெலிகாப்டர் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
இதையடுத்து 22 பேருடன் மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இந்நிலையில் மாயமான ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்கள் வனப்பகுதிக்கு நடுவே கண்டெடுக்கப்பட்டன.
இதையும் படிக்க:
அனுமதி இலவசம்… ஷாப்பிங் மாலில் திடீர் கொள்ளையர்களாக மாறிய பொதுமக்கள்… பாகிஸ்தானில் அதிர்ச்சி!
அங்கிருந்து 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. நீண்ட தேடுதலுக்கு பிறகு மற்ற 5 பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)