ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசை அரங்கு கூடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். குரோகஸ் சிட்டி ஹாலில் பிக்னிக் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இந்த இசை நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. வெடிகுண்டுகள் வீசப்பட்டும், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் 60 பேர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்த அரங்கு முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
தகவல் அறிந்து அங்கு விரைந்த மீட்புக்குழுவினர் விரைந்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டுக்க மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சமீபத்தில் நடந்த தேர்தலில் புதின் வெற்றிபெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் ரஷியாவில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…