Last Updated:
கடந்த ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு தீவிர நடவடிக்கையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வருகிறது.
ரவி நதியிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதை இந்தியா நிறுத்த உள்ளதால் பாகிஸ்தானின் தண்ணீர் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்து இருந்தது.
பொருளாதார பிரச்னையில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானுக்கு தற்போது மற்றொரு பெரும் பிரச்னையாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே போராடி வரும் பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர்-பஞ்சாப் எல்லையில் உள்ள ஷாபூர் கண்டி அணை மார்ச் 31 ஆம் தேதிக்குள் நிறைவடையும் நிலையில் மற்றொரு சவாலை எதிர்கொள்ள உள்ளது.
பல ஆண்டுகளாக இந்தியாவில் போதுமான நீர் சேமிப்பு வசதிகள் இல்லாததால், ரவி நதியிலிருந்து அதிகப்படியான உபரி நீர் பெரும்பாலும் பாகிஸ்தானுக்குள் பாய்ந்து வருகிறது. இந்த உபரி நீர் வெளியேற்றமும் வரும் ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு தீவிர நடவடிக்கையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வருகிறது. இதில் மிக முக்கியமான ஒன்றாக 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது அடங்கும். இதனால் பாகிஸ்தானில் பல மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. தற்போது ரவி நதியின் உபரி நீரும் நிறுத்தப்பட உள்ளதை ஜம்மு காஷ்மீரு் அமைசசர் உறுதி செய்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் நீர்வளத்துறை அமைச்சர் ஜாவேத் அகமது ராணா, பஞ்சாப்-யூனியன் பிரதேச எல்லையில் உள்ள ஷாபூர் கண்டி அணை கட்டி முடிக்கப்பட்டவுடன், ரவி நதியிலிருந்து அதிகப்படியான உபரி நீர் பாகிஸ்தானுக்கு செல்வது நிறுத்தப்படும் என்று கூறினார். இது பாகிஸ்தானில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கேட்டபோது, ”பாகிஸ்தானைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? அவர்கள் ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்கள். அவர்கள் தாங்களாகவே உருவாக்கிய பிரச்சினைகளில் மூழ்கட்டும்” என்று பதிலளித்தார்.
உலக வங்கியின் மத்தியஸ்தத்துடன் 1960 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஆறு நதிகளும் இரு நாடுகளுக்கும் இடையில் பிரிக்கப்பட்டன. கிழக்கு நதிகளான சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆகியவற்றின் அனைத்து நீரையும் இந்தியா தடையின்றிப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. இதற்கிடையில், பாகிஸ்தானுக்கு மேற்கு நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றின் உரிமைகள் வழங்கப்பட்டன. இருப்பினும், பல ஆண்டுகளாக, கிழக்கு ஆறுகளில் இருந்து பாகிஸ்தானுக்குப் பாயும் உபரி நீர் நிறுத்தப்படவில்லை.
Feb 18, 2026 10:33 AM IST
ரவி நதியிலிருந்து தண்ணீர் திறப்பை நிறுத்த இந்தியா முடிவு.. பாகிஸ்தானுக்கு அடுத்த சிக்கல்


