• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ரவிராஜ் கொலை செய்த நிழல் யுத்தம்! மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

GenevaTimes by GenevaTimes
March 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ரவிராஜ் கொலை செய்த நிழல் யுத்தம்! மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த கடற்படை வீரர்கள் உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.



அதன்படி, குறித்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை நீண்டகாலமாக விசாரணை செய்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.


மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகிய நீதியரசர்கள் குழாமினால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.


இதற்கமைய, மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லுபடி அற்றதாக ஆக்கப்பட்டுள்ளதோடு , குறித்த படுகொலை சம்பவம் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (TNA) சார்பில் போட்டியிட்டு வந்த மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ ரவிராஜ், 2006 நவம்பர் 10 அன்று கொழும்பில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்ட பின்னர் மருத்துவமனையில் காலமானார்.


கொழும்பில் உள்ள தனது வீட்டிலிருந்து பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது அவர் சுடப்பட்டார்.

இந்தத் தாக்குதலில் அவரது பாதுகாவலர்களில் ஒருவரான சார்ஜென்ட் லக்ஷ்மன் லோகுவெல்லாவும் கொல்லப்பட்டார்.


யாழ்ப்பாணத்தின் முன்னாள் மேயரும், தொழில் ரீதியாக வழக்கறிஞருமான நடராஜா ரவிராஜ், “ரவிராஜ் அண்ட் அசோசியேட்ஸ்” என்ற தனது சொந்த சட்ட நிறுவனத்தைக் கொண்டிருந்தார்.



யாழ்ப்பாணம் தென்மராட்சித் துறையின் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

ரவிராஜ் 1997 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகர சபைக்கு கவுன்சிலராக தெரிவு செய்யப்பட்டார்.



அவர் 2001 பொதுத் தேர்தலில் முதன்முறையாக யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதிநிதியாகப் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2004-ஆம் ஆண்டில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


மூத்த கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் கொல்லப்பட்ட ஓராண்டுக்குள் ரவிராஜின் கொலை நிகழ்ந்துள்ளது.

கொலைக்கு முந்தைய நாள் (நவம்பர் 9, 2006), ரவிராஜ் கொழும்பில் உள்ள UNICEF அலுவலகத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தார்.

வஹாரை (Vaharai) பகுதியில் அரச படையினரின் குண்டு வீச்சில் 45–47 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்த்து இது நடைபெற்றது.

கொலை நாள் காலையில்(நவம்பர் 10, 2006) (7:00–8:00 மணி) தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார்.

அதில் தமிழ் மக்களின் பிரச்சினைகள், அரசின் செயல்கள் குறித்து ஆணித்தரமான கருத்துக்களைத் விவரித்துள்ளார்.

அந்தக் காலகட்டத்தில் (2006) இலங்கை உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருந்தது. 

 அரச படையினருடன் இணைந்து செயல்பட்ட சில குழுக்களால் குறிப்பாக கருணா குழு , TMVP குழு  இந்தக் கொலையைச் செய்ததாக குற்றம் சாட்டின.

அரச புலனாய்வு குறித்தும் தமிழர் தரப்புகளால் சந்தேகம் வெளியிடப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் 2016 டிசம்பர் 24 அன்று கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த வழக்கின் சந்தேநபர்களாக அடையாளமிடப்பட்ட ஐந்து பேரையும் விடுதலை செய்தது.

இதற்கு சாட்சிகள் போதியளவு இல்லை என்று கருதப்பட்டது.  

இது தொடர்பில் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் மேன்முறையீடு செய்திருந்தார்.

இதன்போது வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சில அறிக்கைகள் உள்ளன.

இதன் தொடர்ச்சியாக 2025 வரை சில புதிய சாட்சியங்கள் குறிப்பாக பிள்ளையான், சம்பத் மனம்பேரி போன்றோர் பெயரும் பேசப்பட்டது.

 ரவிராஜ் கொலை இந்த  நிழல் யுத்தத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. உலக அளவில் பல நாடுகள் மற்றும் அமைப்புகள் இந்தக் கொலையைக் கண்டித்தன.

இன்றுவரை (2026) இந்த வழக்கில் முழுமையான நீதி கிடைக்கவில்லை என்பது தமிழ் அரசியல் தரப்புகளின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.  

Read More

Previous Post

கடும் வெப்ப அலை காரணமாக வெப்பத்தாக்கம் மற்றும் நீண்டகால உடல்நல அபாயங்கள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். – Malaysiakini

Next Post

மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை | India News (இந்தியா செய்திகள்)

Next Post
மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை | India News (இந்தியா செய்திகள்)

மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin