Last Updated:
சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா அணியில் இருந்து விடுவிக்கப்படலாம் என சில கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரையொட்டி மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஏலத்தின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்ரேட் முறையில் வாங்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா அணியில் இருந்து விடுவிக்கப்படலாம் என சில கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜாவை சென்னை அணி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது-
ஜடேஜா ஒரு “அதிரடி வீரர் (Gun Player) பல ஆண்டுகளாக அணிக்குச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். சர் ரவீந்திர ஜடேஜா அணியில் இருக்க வேண்டும். சஞ்சு சாம்சனுக்காக ஜடேஜாவை வர்த்தகம் செய்யக்கூடாது.
இந்த ஆண்டு விளையாடவிருக்கும் எம்.எஸ். தோனி கண்டிப்பாகத் தக்கவைக்கப்பட வேண்டும். மேலும், தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து கேப்டனாக நீடிக்க வேண்டும். முக்கிய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தக்கவைக்கப்பட வேண்டும்.
November 10, 2025 2:57 PM IST


