மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே இன்று(ஜூன் 17) காலை கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது அதே ரயில் பாதையில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ ஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே விபத்து நிகழ்ந்த ரங்கபானி பகுதிக்கு இருசச்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்தபடி சென்ற அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் அங்கு விபத்து குறித்து ஆய்வு செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “மீட்பு பணிகளில் முழு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், இது அரசியல் செய்வதற்கான நேரமல்ல” என்று தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணமும், காயமடைந்து சிகிச்சையில் உள்ளோருக்கு ரூ. 2.50 லட்சமும், சிறிய அளவிலான காயமுற்றோருக்கு ரூ. 50,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

&w=1200&resize=1200,675&ssl=1)