பொங்கோல் MRT ரயில் நிலையத்தில் பெண்ணின் தலை மற்றும் கழுத்து ரயில் கதவுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்ட சம்பவத்திற்கு SBS டிரான்சிட் நிறுவனம் 100 சதவீதம் பொறுப்பு என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று (ஆகஸ்ட் 20) வழங்கிய தீர்ப்பில், SBS டிரான்சிட் நிறுவனம் பராமரிப்பு கடமையை மீறியதாகக் கண்டறியப்பட்டது.
சிங்கப்பூர் டோட்டோ.. முதல் பரிசு சுமார் 17 கோடி – வெற்றியை சுவைக்க கடும் போட்டி!
ஜூன் 2022 இல் நடந்த இந்த சம்பவத்தில், ரயிலில் இருந்து வெளியேற முயற்சிக்கும்போது பிரதான விளக்குகள் அணைக்கப்பட்டதாகவும், இதனால் தடுமாறி விழுந்ததாக திருமதி இங் லாய் பிங் என்ற பயணி கூறினார்.
ரயில் செயல்பாடு நிறுத்தப்பட்டது குறித்து எந்த முன் அறிவிப்பும் ஒலிக்கவோ அல்லது வாய்மொழியாகவோ வெளியிடப்படவோ இல்லை என சொல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பயணியின் கவனக்குறைவு அலட்சியத்தால் ஏற்பட்டதாக SBS டிரான்சிட் வாதாடியது, ஆனால் பயணிக்கு வழங்கப்படவேண்டிய கவனிப்பு கடமையை போக்குவரத்து நிறுவனம் மீறியதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
பொறுப்பு மற்றும் இழப்பீடு குறித்த விசாரணையில் தொடர்ந்து நடைபெறும்.
மேலும், இதற்கான தீர்ப்பும் பின்னர் வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் மனிதவள அமைச்சகம் எச்சரிக்கை – மீறினால் நடவடிக்கை
The post ரயில் கதவுகளுக்கு இடையில் சிக்கிய பயணியின் தலை, கழுத்து – “SBS டிரான்சிட் நிறுவனம் 100% பொறுப்பு” appeared first on Tamil Daily Singapore.

