புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் கைவிடப்பட்ட நிலையில், பல நாட்கள் பழமையானதாக நம்பப்படும் சிசுவின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
புகையிரதத்தின் கழிவறையைச் சுத்தம் செய்யும் போது துப்பரவு பணியாளர் ஒருவரால் குறித்த சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்போது துப்பரவு பணியாளர் தெமட்டகொட பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்ட பொலிஸார், கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன திஸாநாயக்கவிடம் உண்மைகளை முன்வைத்தனர்.
இதையடுத்து சிசுவின் எச்சங்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். R