Last Updated:
குல்மார்க்கில் பேஷன் ஷோ சர்ச்சை, ஆபாச ஆடைகள், ரம்ஜான் மாதம், முதலமைச்சர் உமர் அப்துல்லா விசாரணை உத்தரவு, வடிவமைப்பாளர்கள் மன்னிப்பு.
காஷ்மீரின் குல்மார்க்கில் நடைபெற்ற பேஷன் ஷோ அங்கு பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்
பிரபல ஆடை வடிவமைபாளர்கள் சிவன் மற்றும் நரேஷ் தங்களது நிறுவனத்தின் 15 ஆண்டு நிறைவு விழாவை குல்மார்க்கில் பேஷன் ஷோ நடத்தி கொண்டாடினர்.. அந்த பேஷன் ஷோ தான் தற்போது காஷ்மீரின் சட்டப்பேரவையில் விவாதிக்கும் அளவிற்கு பெரும் சர்ச்யாக வெடித்துள்ளது.
பேஷன் ஷோவின் போது மாடல்கள் அணிந்து வந்த ஆடைகள் மிகவும் ஆபாசமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரம்ஜான் மாதத்தில் ஆபாச உடைகளில் ஒய்யாரமாக நடந்து வந்தது வெட்ககேடானது என பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிகழ்வு முதலமைச்சருக்கு தெரிந்தே நடைபெற்றதாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான இல்திஜா முஃப்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுப்பட்டனர். பேஷன் ஷோவை நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
பேஷன் ஷோ நடைபெற்ற குல்மர்க் விடுதி, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லாவின் உறவினர்கள் என பாஜகவினர் குற்றம்சாட்டினர். அப்போது பதிலளித்த முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, ரம்ஜான் மாதத்தில் மட்டுமல்ல, ஆண்டின் எந்த நேரத்திலும் இது போன்ற பேஷன் ஷோக்களை நடத்த கூடாது என கூறினார். சட்டம் மீறப்பட்டிருந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு மன்னிப்பு கோரியுள்ள ஆடை வடிவமைப்பாளர்கள் சிவன் மற்றும் நரேஷ், யாருடைய மத உணர்வையும் புண்படுத்துவது தங்கள் நோக்கம் அல்ல என கூறியுள்ளனர். பனிச்சறுக்கு வாழ்க்கை முறையில் புதுமையை புகுத்துவதே தங்களது நோக்கம் என்றும் கூறியுள்ளனர்.
Jammu and Kashmir
March 11, 2025 8:11 AM IST