மதுரை என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவில் வருவது மதுரை மல்லி தான். மதுரையின் தனிச்சிறப்புகளில் ஒன்றான மதுரை மல்லிக்கு என்று எப்போதும் தனிமவுசு உள்ளது.
இதற்குக் காரணம் மதுரை மல்லிகைப் பூவின் மனம் மற்றும் அதன் தனித்தன்மை என்று கூறப்படுகிறது. இதனால் மதுரைக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் கூட மதுரை மல்லியை விரும்பி வாங்குகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் வரத்தைப் பொருத்தும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளைப் பொருத்தும் மல்லிகைப் பூவின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கும்.
இதையும் படிங்க: விரைவில் திருமணம் நடக்க வேண்டுமா? அப்போ இந்த பூஜை செய்யுங்கள்…
சத்திரப்பட்டி, உசிலம்பட்டி போன்ற பகுதிகளிலிருந்தும் தேனி, திண்டுக்கல், விருதுநகர் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் மல்லிகை பூ மதுரை மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும்.
இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ மற்றும் பிற பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
அதன் படி, மதுரை மல்லிகைப் பூவின் விலை 300இல் இருந்து 500 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 800இல் இருந்து 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
அதேபோல் முல்லை 800 ரூபாய்க்கும், பிச்சி 700 ரூபாய்க்கும், சம்பங்கி 200 ரூபாய்க்கும், அரளி 300 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 250 ரூபாய்க்கும், செண்டு மல்லி 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பிற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)