Last Updated:
இந்த போட்டியில் இருவரும் அரைசதம் விளாசியதன் மூலம் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ரன் அவுட் ஆனதால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் சக வீரருடன் மைதானத்தில் சண்டையிட்டுக் கொண்ட காட்சி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற Top End 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணி – வங்கதேச ஏ அணியை எதிர்த்து விளையாடியது.
போட்டியின் 12ஆவது ஓவரின்போது, பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கவாஜா ரன் அடிக்க முயற்சி செய்ய பந்து காலில் பட்டு அங்கேயே இருந்தது.
அதற்குள் ஒரு ரன் ஓடிவிடலாமே என முயற்சித்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் யாசிர் கானை, வங்கதேச வீரர்கள் ரன் அவுட் செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த யாசிர் கான் பேட்டை தூக்கி வீசி சண்டையிட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இந்தக் காட்சி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
August 15, 2025 5:42 PM IST


