• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ரன்குவிப்பில் புதிய உச்சம்… சச்சின், ரிக்கி பான்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி

GenevaTimes by GenevaTimes
November 15, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ரன்குவிப்பில் புதிய உச்சம்… சச்சின், ரிக்கி பான்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சச்சின், சங்கக்கரா, ரிக்கி பான்டிங் ஆகியோரை விராட் கோலி பின்னுக்கு தள்ளியுள்ளார்.

கான்பூரில் நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ஒருநாள் போட்டியைப் போல அதிரடியாக ரன்கள் குவித்துள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டம் மீதம் உள்ள நிலையில் இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

மழை குறுக்கீடு காரணமாக 2 மற்றும் 3 ஆம் நாள் ஆட்டங்கள் நடைபெறாத நிலையில், இன்று 4 ஆம் நாள் ஆட்டம் கான்பூரில் நடைபெற்றது. வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டிற்கு 107 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இருந்து ஆட்டத்தை தொடர்ந்தது.

விளம்பரம்

அந்த அணியின் மோமினுல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 194 பந்துகளை எதிர்கொண்ட அவர் 17 பவுண்டரி 1 சிக்சருடன் 107 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.

மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 74.2 ஓவர்களில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 34.4 ஓவர்களில் 9 விக்கெட்டை 285 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.

இந்த இன்னிங்ஸில் விராட் கோலி 35 பந்துகளை எதிர்கொண்டு அதிரடியாக 47 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 27 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.

விளம்பரம்

இதையும் படிங்க – ஒலிம்பிக் வீரர்களை கவுரவித்த ரிலையன்ஸ் அறக்கட்டளை – நாட்டின் பெருமை என புகழ்ந்த நீடா அம்பானி!

இந்த இலக்கை எட்டுவதற்கு விராட் கோலிக்கு மொத்தமே 594 இன்னிங்ஸ்கள் மட்டுமே தேவைப்பட்டன. முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்ஸ்களிலும், இலங்கை அணியின் குமார் சங்கக்கரா 648 இன்னிங்ஸ்களிலும், ரிக்கி பான்டிங் 650 இன்னிங்ஸ்களிலும் சர்வதேச போட்டிகளில் 27 ஆயிரம் ரன்களை கடந்திருந்தனர்.

600 இன்னிங்ஸ்களுக்குள் விளையாடி சர்வதேச போட்டிகளில் 27 ஆயிரம் ரன்களை கடந்த ஒரே வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார் விராட் கோலி.

விளம்பரம்

.

Read More

Previous Post

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேர் விடுதலை: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி | Dr Subbiah murder case

Next Post

இந்திய பொருளாதாரத்தில் தடுமாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் | No recession in Indian economy: RBI Governor

Next Post
இந்திய பொருளாதாரத்தில் தடுமாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் | No recession in Indian economy: RBI Governor

இந்திய பொருளாதாரத்தில் தடுமாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் | No recession in Indian economy: RBI Governor

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin