நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா (Sarath Fonseka) ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickremesinghe
President of Sri Lanka ) இணைய தயாராகி வருவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
ஹட்டன், வெலிஓயா பிரதேசத்தில் இன்று (21) நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட பொன்சேகா விரும்பியதாகவும் திகாம்பரம் (palani thigambaram) தெரிவித்துள்ளார்.
பொன்செகாவின் விமர்சனம்
ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, வேட்பாளர் பதவியை வழங்காததான் காரணமாக அவரை சரத் பொன்சேகா விமர்சித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் பொன்சேகா விமர்சித்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…. |

