அப்போது ரஜினிகாந்த தரப்பில் வக்கீல் டி.டி.ரவிச்சந்திரன் ஆஜராகி, “1994-ம் ஆண்டு நிதிச் சட்டத்தின் கீழ் ஓட்டலுக்காக வாடகைக்கு விடப்படும் கட்டிடங்களுக்கு சேவை வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சேவை வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்” என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சேவை வரிகள்துறை தரப்பு வக்கீல் ரீனா, ஒட்டலுக்குள் உணவகம், கருத்தரங்க கூடம், கிளப், பார் ஆகியவை இயங்கி வந்ததால், சேவை வரி விலக்கு பெற முடியாது” என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம் உறுப்பினர்கள், “ஓட்டல்களில் தங்கும் விருந்தினர்களின் வசதிக்காக இயக்கப்படும் உணவகம் உள்ளிட்ட வசதிகள் ஓட்டலின் அங்கமாக மட்டுமே கருத முடியும். அவற்றை தனித்தனி கட்டிடமாக கருத முடியாது. எனவே, வரி விலக்கு பெற ரஜினிகாந்துக்கு உரிமை உள்ளது. சேவை வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம்” என்று தீர்ப்பு அளித்துள்ளனர்.
