பாலிவுட்டில் கடந்த 1998-ம் ஆண்டு வெளியான டோலி சஜா கே ரஹ்னா என்ற படத்தில் அறிமுகமானவர் ஜோதிகா. தமிழில் 1999-ம் ஆண்டு வெளியான வாலி படத்திலும் நடித்து இருந்தார். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து தமிழில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார். அதன்பிறகு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பிறமொழி படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.
நடிகை ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். சூர்யா – ஜோதிகா தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனிப்பட்ட காரணங்களுக்காக சூர்யா – ஜோதிகா குடும்பத்தார் மும்பையில் குடியேறியுள்ளனர்.
இதற்கு பதில் அளித்த நடிகை ஜோதிகா அவரே பரிசு தான் என்று கூறியுள்ளார். இவரது பதிலை ஸ்கிரீன்ஷாட் எடுத்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


