Last Updated:
சமீபத்தில் நடைபெற்று முடிந்த லக்னோ அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியின் பிளேயிங் லெவனில் அஸ்வின் இடம்பெறவில்லை
யூடியூபில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது தோனியை பற்றி அதில் பங்கேற்ற ஒருவர் பேசுவதை ரவிச்சந்திரன் அஸ்வின் தடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். யூடியூப் சேனலை நடத்தி வரும் அஸ்வின் அதில் சென்னை அணி குறித்து சமீபதில் பேசியிருந்தார். இந்த வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் இனிமேல் தனது யூடியூப் சேனலில் சென்னை அணி குறித்து வீடியோக்கள் எதுவும் ஒளிபரப்ப மாட்டோம் என்று தெரிவித்திருந்தார்.
அஸ்வினின் இந்த செயல்பாடு காரணமாக சென்னை அணிக்கும் அவருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த லக்னோ அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியின் பிளேயிங் லெவனில் அஸ்வின் இடம்பெறவில்லை. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 166 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி 19.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியில் அஸ்வினை தேர்வு செய்வதை தோனி தவிர்த்திருந்தார். இந்த நிலையில் அஸ்வின் யூடிப் சேனலில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
It’s really sad to see Ashwin like this.
pic.twitter.com/sEf9dJ0j7o
— Hari (@Harii33) April 18, 2025
அதில் பேசிய விருந்தினர் ஒருவர் “ஸ்ரேயாஸ் ஐயர் மாதிரியான ஆளு, தல தோனி மாதிரியான ஆளு எப்படி அடிச்சு ஜெயித்துக் கொடுத்தார் பாத்தீங்களா லாஸ்ட் மேட்ச்ல” என்று பேச ஆரம்பித்தார்.
இதையும் படிங்க – சச்சின் முன் சேவாக்கை முகத்தில் குத்திய பயிற்சியாளர் – நடந்தது என்ன தெரியுமா?
இதனை கேட்டு பதறிப் போன அஸ்வின் “லாஸ்ட் மேட்ச் பத்தி பேசக்கூடாது” என்றார். அதற்கு அந்த விருந்தினர் “நீங்கள் தான் பேசக்கூடாது நான் பேசலாம்” என்று பதில் அளிக்க “எனது சொந்த டீம் குறித்து நாம் எப்போதுமே பேச மாட்டோம். ராஜஸ்தான் அணியில் இருந்த போது அந்த அணி பற்றி நாம் பேசவில்லை” என்று அஸ்வின் பதில் அளித்தார். தற்போது இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
April 19, 2025 4:58 PM IST
யூடியூபில் தோனியைப் பற்றி பேசுவதை தடுத்த அஷ்வின்? இணையத்தில் வைரலாகும் வீடியோ


