Last Updated:
யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியாவின் மோசமான கருத்துகளை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. மேலும் அவரை கைது செய்யவும் தடை விதித்துள்ளது.
யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியாவின் மனது மோசமான கருத்துகளால் நிறைந்துள்ளது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர்.
தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா, பெற்றோரின் உடலுறவு குறித்து பேசியதால் பல்வேறு பகுதிகளில் அவர் மீது வழக்குகள் பதிவாகின. இந்த சூழலில் உச்சநீதிமன்றத்தில் ரன்வீர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு விசாரித்தது.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், “மனதில் தோன்றுவதை எல்லாம் பேசுவதா” என்றும் ரன்வீரின் மனது மோசமான கருத்துகளால் நிறைந்துள்ளது என்றும் அவருக்கு ஏன் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கேட்டனர். மேலும் ரன்வீருக்கு எதிராக மகாராஷ்டிரா மற்றும் அசாமில் FIR விசாரணைக்கு ஆஜராகும் பட்சத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ள இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : “அண்ணாமலையிடம் நேரடியாக கேட்கிறேன்.. ஏன் இந்தி தேவை?” – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி
அத்துடன் விசாரணைக்கு செல்லும்போது காவல்நிலையத்துக்குள் வழக்கறிஞரை அழைத்துச் செல்லக்கூடாது என்றும் ரன்வீர் மற்றும் அவரின் கூட்டாளிகள் மறு உத்தரவு வரும் வரை வேறு எந்த நிகழ்ச்சியையும் ஒளிபரப்பக் கூடாது என்றும் ரன்வீர் அல்லாபாடியா தனது பாஸ்போர்ட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிபந்தனை விதித்தனர்.
நாட்டை விட்டு வெளியே செல்ல உச்சநீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பரவும் மோசமான கருத்துகளை தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என விளக்கமளிக்கவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
February 18, 2025 3:43 PM IST
யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியாவின் அறுவெறுக்கத்தக்க கருத்து.. கடுமையாக கண்டித்த உச்சநீதிமன்றம்


