Last Updated:
தொடர்ந்து 174 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
டி20 உலகக்கோப்பை தொடரில் கனடா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த கனடா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது. கனடா அணியின் தொடக்க வீரர் யுவராஜ் சாம்ரா அபாரமாக விளையாடி 65 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 110 ரன்கள் குவித்து அசத்தினார்.
அவருக்கு ஒத்துழைப்பு அளித்த கேப்டன் தில்ப்ரீத் பாஜ்வா 36 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, கைல் ஜேமிசன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
தொடர்ந்து 174 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. டிம் செய்ஃபர்ட் 6 ரன்களிலும், ஃபின் ஆலன் 21 ரன்களிலும் ஆட்டமிழக்க, அந்த அணி 30 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
இருப்பினும், மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் கிளென் பிலிப்ஸ் ஜோடி மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்தனர். அதிரடியாக ஆடிய கிளென் பிலிப்ஸ் 36 பந்துகளில் 76 ரன்களும், நிதானத்துடன் அதிரடியைக் கலந்த ரச்சின் ரவீந்திரா 39 பந்துகளில் 59 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


