இதற்கான நிதிச்செலவு மிக அதிகம் என்று கூறிய சஞ்சய் மல்ஹோத்ரா, அதனை தற்போது மத்திய அரசு செய்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார். ஆனால், நீண்ட நாட்களுக்கு அதனை அரசு மட்டுமே செய்ய முடியாது என்று கூறிய ஆர்பிஐ ஆளுநர், யுபிஐ பரிவர்த்தனைக்கான செலவை வணிகர்களிடமோ, பொதுமக்களிடமோ வசூலிக்கும் சூழல் ஏற்படக்கூடும் என தெரிவித்தார். இதன் மூலம், விரைவில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படலாம் என கருதப்படுகிறது.


