யாருக்குக் கட்டணம் பொருந்தும்? வணிக நிறுவனங்களுக்குச் செய்யப்படும் ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே 0.4 சதவீதம் என்ற அளவில் ‘வணிக கட்டணம்’ (எம்.டி.ஆர்- Merchant Discount Rate) வசூலிக்கப்படும். ரூ.75,000 மற்றும் அதற்கும் மேலான பரிவர்த்தனைகளுக்கான அதிகபட்சக் கட்டணம் ரூ.300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் மற்றும் விவசாய இடுபொருட்கள் போன்ற அத்தியாவசியத் துறைகளில் ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 மட்டுமே நிலையான கட்டணமாக வசூலிக்கப்படும். மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பங்குச்சந்தை தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு 0.02 சதவீதக் கட்டணம் (அதிகபட்சம் ரூ.300 வரை) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

