Last Updated:
டிஜிட்டல் பணப்பரிமாற்றம் வந்தது முதல் மக்கள் அனைத்து இடங்களிலும் தங்களது மொபைலில் இருந்து யுபிஐ மூலம் பேமண்ட் செய்து வருகின்றனர். நகை முதல் டீ வரை அனைத்துக்கும் யுபிஐ பேமண்டை பயன்படுத்துவது மக்களுக்கு எளிதான ஒன்றாக மாறி விட்டது.
நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் யுபிஐ பேமண்டின் அவ்வப்போது மாற்றங்களை செய்து வருவது வாடிக்கையான ஒன்று. டிஜிட்டல் பணப்பரிமாற்றம் வந்தது முதல் மக்கள் அனைத்து இடங்களிலும் தங்களது மொபைலில் இருந்து யுபிஐ மூலம் பேமண்ட் செய்து வருகின்றனர். நகை முதல் டீ வரை அனைத்துக்கும் யுபிஐ பேமண்டை பயன்படுத்துவது மக்களுக்கு எளிதான ஒன்றாக மாறி விட்டது. இப்போது நாம் பயன்படுத்தி வரும் யுபிஐ பேமண்டிற்கு வங்கி கணக்கு அத்தியாவசமான ஒன்றாக இருக்கிறது. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை பயன்படுத்தி நாம் யுபிஐ பேமண்ட் செய்து வருகிறோம்.
ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையிலான யுபிஐ பயன்பாட்டிற்கான தினசரி உச்சவரம்பு தற்போது 1 லட்ச ரூபாயாக உள்ளது. அதைப்போலவே, வர்த்தக நிறுவனத்திற்கும் தனி நபருக்கும் இடையிலான உச்சவரம்பு ஒரு லட்ச ரூபாயாகவும் விதி விலக்காக சில சமயங்களில் 2 லட்சம், 5 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,நபருக்கும் வர்த்தக நிறுவனத்துக்கும் இடையிலா பணப்பரிவர்த்தனை உச்சவரம்பை உயர்த்த என்.பி.சி.ஐ நிறுவனத்துக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
April 10, 2025 3:18 PM IST

