இறுதி யுத்த காலத்தில் கைப்பற்றபட்ட விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கு கீழ் இருந்த பொதுமக்களின் தங்கத்தை அவர்களிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
பத்தரமுல்ல (Battaramulla) இராணுவ தலைமையகத்தில் நேற்று (02) இடம்பெற்ற நிகழ்வில் இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பதில் காவல்துறை மா அதிபரால் பொறுப்பேற்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி என்பனவற்றின் பெறுமதி நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை ஊடாக மதிப்பிடப்பட உள்ளது.
இதையடுத்து, அவற்றை இலங்கை மத்திய வங்கியிடம் (Central Bank of Sri Lanka) ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்பு, அடையாளப்படுத்தப்படுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்படும் பொருட்களை பொதுமக்களிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

