யுத்தம் முடிந்த பின்னரும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதுவரை தீரக்கப்படாமல் உள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த தகவலை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்திற்கான நிர்வாக தெரிவிற்காக நடைபெற்ற கூட்டத்தின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணிலுடைய வடக்கு விஜயம்
அத்தோடு, ரணிலுடைய வடக்கு விஜயம் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவே அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த கூட்டத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி, மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியின் பிரதிநிதிகள் போன்றோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

